கார்டன் சிற்றி பேஷன்ஸ்
ஆடைத் தொழில்துறையின் குறைந்த ஊதியத்தால், கோவிட்-19 நெருக்கடியின்போது,பெரும்பாலான ஆடைத் தொழிலாளர்களுக்கு எந்தச் சேமிப்பையும் இல்லாமல் போனது. ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உள்ள பெரும்பாலான அரசுகள் வேலையில்லாத் திண்டாட்டப் பலன்களை குறைவாக வழங்குகின்றன அல்லது வழங்குவதில்லை. அதனால், வேலைக்குச் செல்லாத ஆடைத் தொழிலாளிக்கும் அவரது குடும்பத்தின் உடனடி வறுமைக்கும் இடையே உள்ள ஒரே விஷயம், பெரும்பாலான ஆடைத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது சட்டப்பூர்வமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடுவதுதான்.
பொருந்தொற்று காலத்தின்போது பணிநீக்கம் செய்யப்பட்ட பல ஆடைத் தொழிலாளர்களுக்கு, சில அல்லது எல்லா முக்கியமான இழப்பீடுகளும் மறுக்கப்பட்டுள்ளதை தொழிலாளர் உரிமைகள் கூட்டமைப்பு (டபிள்யூஆர்சி) நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. சட்டம், வணிக பிராண்டுகளின் தொழிலாளர் கடமைகள் மற்றும் அவர்கள் தைத்த ஆடைகளின் சில்லறை விற்பனையாளர்கள் எல்லாவற்றையும் மீறி இது நிகழந்துள்ளது.
பணிநீக்கம், பின்னர் திருட்டு:ஃபேஷன் பிராண்ட்ஸ் என்ற டபிள்யூஆர்சி-யின் அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட 31 ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகளில் ஒன்று கார்டன் சிற்றி ஃபேஷன்ஸ். இது கோவிட் 19 பரவியபோது ஊதியத் திருட்டுக்கு உடந்தையாக இருந்தது, ஏப்ரல் 2021 வரை சட்டப்பூர்வமாக கட்டாயமாக கொடுக்க வேண்டிய பணிநீக்க இழப்பீட்டைக் கொடுக்க இது வேண்டியிருந்தது. 2020 ஆம் ஆண்டு மே மாதம் கார்டன் சிற்றி ஃபேஷன்ஸ் மூடப்பட்டபோது 4,500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. 2021 ஏப்ரல் மாத நிலவரப்படி, இந்தத் தொழிலாளர்கள் 778,803 டாலர் சட்டப்பூர்வ இழப்பீட்டிற்காக இன்னும் காத்திருந்தனர்.
கார்டன் சிற்றி ஃபேஷன்ஸ், #84, தொழில்துறை புறநகர், யஷ்வந்த்பூர், பெங்களூரு,இந்தியா என்னுமிடத்தில் அமைந்துள்ள ஆடை தைக்கும் நிறுவனமாகும். ஆடை மற்றும் ஜவுளி தொழிலாளர் சங்கம் (ஜேஎடிடபிள்யூயு) டபிள்யூஆர்சி-யிடம் இது பற்றி தகவல் அளிக்க, அந்த தொழிலாளர்கள் சி&எ மற்றும் ஜேசிபென்னி-க்கு ஆடை தைத்து வழங்குவதை உறுதி செய்தனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சி&எ வெளிப்படுத்திய செய்தியில் கார்டன் சிட்டி ஃபேஷன் யூனிட்கள் II, III, IV மற்றும் V அடங்கின. இறக்குமதிப் பதிவுகள் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கெஸ்-யின் ஏற்றுமதிகளையே காட்டுகின்றன. கார்டன் சிட்டி ஃபேஷன்ஸ் அதன் இணையதளத்தில் அதன் முக்கிய பங்குதாரர்களாக சி&எ, கெஸ், டிபன்ஹாம்ஸ், சிசில், நெக்ஸ்ட், ஃபாரெவர் 21, எஸ்பிரிட், மஃப்டி மற்றும் டன்னெஸ் ஸ்டோர்ஸ் ஆகியவற்றை கட்டின.
Read More:
Join our newsletter
Sign up to the WRC’s mailing list to stay updated on our work.